Monday, November 10, 2014

கண்களாலா பெளர்ணமி ?

அவள் கண்களை இன்று
சில நொடிகள் நேராக காண கண்டேன்.

என்ன அதிசயம்

சதுர்தியில் இன்று பெளர்ணமி பொல
நிலவும் ஒளியும் இறுக்க கண்டேன்.

Friday, October 31, 2014

இன்று நான் காண்பது

மயங்கி உறங்கும் பயனத்தில் 
ஒரு கனம் எழுப்பி
இது பார் இங்கு என்ற முழு நிலவு,
இன்றும் உலுக்கி காண செய்த உன் கண்கள்

கன், எறிந்து அனைந்து எறியும்
கூசும் நெடுஞ்சாலை மொழிகளா
இல்லை, அவை குளிர்ந்த கனிவு தரும்
இன்றும் நான் காணும் விழி நிலவு

மயங்கி உறங்கி செல்லும் என் பயனத்தில்
இன்று நான் காண்பது ஒரு நிலவு

நான் காணும் நிலவு

மயங்கி உறங்கும் இரவு பயனத்தில்
ஒரு கனம் உலுக்கி
இது பார் இங்கு என்ற முழு நிலவு
இன்றும் உலுக்கி காண செய்த
உன் கண்கள்

நிலவு ஒருமையில் இருக்க
இன்று இங்கோ கான்பது கலங்க செய்கிறது
சந்திர சூரிய விழிகள் என்பதெல்லாம்
சிம்ம ஆயனுக்கோ, வேழம் கிழித்தவனுக்கோ ஆகும் வித்தை
பென் தெய்வங்களுக்கு அப்படியாய் அல்ல

அபிராமிக்கு பட்டனாய், அரிவு அற்று அரிவது
இப்பென் விழிகள் இரண்டு அல்ல
கனிவுடனும் குளிருடனும், அழகுடனும் அமுதெனவே
அளிப்பவள் காளியாயினும் கெளரியாயினும்

மயங்கி உறங்கி
நான் காண்பது ஒரு நிலவு

கண்ணே

வைகரை இமை
விடியல் கண்
தோற்றம் கண்

தேடல் கண், தேர்வு கண்
தொடுகை கண்

அகழ்ந்திட கண், ஆழம் கண்
அமிழ்திடல் கண்ணிலே

ஆசி கண், அறிவித்தல் கண்
அன்பும் கண்ணே

ஊக்கம் கண், ஊர்ந்திடல் கண்
ஊடலும் கண்களாலே

ஊழ் கண்
உள் அளவும் கண்ணிலே, இனியேனும்
உறக்கம் தந்திடு என் இமையே

Thursday, October 2, 2014

ஆழம் உறைவது தீயே

தென்றல் ஏந்தி செல்லும் தணல் பொறிகளா இவை
கோவில் தெய்வம் காட்டும் தீப சுடரா இவை
அன்பில் சோறும் பிறக்கும் அடுபங்கரை தழலா இவை
தேவருக்காய் வின் தொடும் வேள்வி ஜ்வாலையா இவை
காத்திருக்கும் காட்டை சுவைக்கும் சென் நாவா இவை

நீரில் பிறந்ததாம் தீ
உன் கண்களுள் நீர் இருப்பினும்
அதன் ஆழம் உறைவது தீயே

Friday, September 26, 2014

உன் பதம் மட்டும் எமக்கு அருள்வாய்

விதி வழி ஊர்ந்த வாழ்வில்
உன் விழி ஓடிய வழி வந்தேன்

விதவிதம் தினம் நிகழ் வாழ்வில்
உன் விரல் கூட்டிய விதம் நின்றேன்

வழி பல காணும் இவ்வுலகில்
உன் குரல் கூரிய திசை சென்றேன்

மலர் வாசம் நிறை சோலை, இவை

உன் குழல் சூடிய மனம் என்றேன்

வேண்டும் எம் சிரம் அமர்ந்திடல்
உன் பதம் மட்டும் எமக்கு அருள்வாய்

இரவு

இரவு
இவன் இங்கு இரைந்ததனால் அல்ல
இறைவி இசைந்து அருளியதால்

Tuesday, September 9, 2014

இரவு பொழுதல்ல

இரவு பொழுதல்ல
பொழுதென்பது கழிவதென்றால்

நற்பொழுதில் புகுத்த தேவை புதியனவாம்
கனவுகள் பொல் பொலிதான புதிதில்லை

பொலிவுடையொர்க்கு பகல் தருவது ஊழ்
அதன் வினை மீன்டெழ கனவுதருவது இரவு

இவ் இரவு பொழுதாகும்
பொழுதெல்லாம் பொலிவதர்கே!

Tuesday, September 2, 2014

ஈ ஆடல்

தேடல் இல்லா உள்ளம் முன்
ஆடல் வல்லான் ஞான கூத்தும்
ஈ ஆடல் தான்

பொன் குடுவை நிறைந்த தேனும்
பாலை மன் தொட்ட துளி
நீர் தான்

தாரளம் நம்மிடையே உன்டு
பாலை உள்ளங்களும்
கொன்ட கடலை வியாழனும்
கூத்தனூருக்கு வெள்ளை பட்டும்

இது மட்டுமே போதாது

போதாது போதாது 
வெறும் பார்வை இது
என் கண்கள் முற்றாய் வெகுது
காலை பனி பொல் நோகுது

ஆகாது
என் உயிர் குடிக்க உன்
பார்வை இது மட்டுமே
போதாது

:(

Wednesday, August 27, 2014

இவ் கரிய விழி

இவ் கரிய விழி
இவை துடித்து, சட்டென கலங்கி பின்
பூரித்து, துயில் மொட்டு விரித்து

பூவாகி, புன்னகைத்து பின்னும்
செய்த ஜாலங்கள் எல்லாம் ஒரு
சேயில் பெற உன் தாதையர்
செய்த தவங்களை உன் மணவாளனும்
செய்து தான் பெறுவானோ ?

Monday, August 4, 2014

நானும் ஓர் கனவே

அழகேன்பது அமுதம் நிறைந்த கலயம்

சிலரிடம் கலயம் மட்டும் அலங்காரமாய்
சிலரிடமோ பொங்கி, வழிந்து, வீனாய்.

சிலரிடம் உன்டு அமுதமே சுமையாய்
பலரிடம் உள்ளே உள்ளது தானரியமலே

வடித்து வைத்தது விளிம்பு தொட்டு
காண்பதற்கும் அழகாய் களிவதர்கும் அமுதேன்றே
அளவுக்கு மீறினாலும் அமுதம் அப்படியே
அள்ளி களைபெய்தினும் அளவும் அப்படியே
இவை எல்லாம் வெறும் கற்பனைதான்
உண்டுடென்றால் சென்றிருபாயோ சில நாழிகையில்
விட்டும் இருப்பேனோ பெரும் மாயையோடே
நானும் ஓர் கனவே என் ஞாலமும் பொய்யே

Monday, June 23, 2014

தவணை முறை ?

::: தவணை முறை ? :::
ஆழ்துயிலாளன் ஒருத்தன் ஆழ்தவத்தானும் உண்டு 
காதலாகி கசிவதும், நாரை வண்டு தூதும், மடல் ஏறி அழுவதும் 
படித்துதும் வரவில்லை. பிறவி இதில் எங்கு பிழைப்பு 
விடையேறியோ
, அம்சிறகோ இப்பொழுதே புறப்படலாம் 
அறிவினால் பயன் வரும் எனும் எண்ணம் வேண்டாம் 
தருவதே உன் கடன் எனில் அதை தீர்க்க 
உனக்கும் உள்ளதோ ஒரு தவணை முறை ?
:::~~~~~~~~~~~~~~~~~:::

இல்லா காலத்தின் களி

::: இல்லா காலத்தின் களி :::
பரமா இல்லா காலத்தில் சுழலும் உன் சக்கரம் 
எங்கள் சிறு நொடி காலம் முழுவதும் சும்மாதான் உன் கையில் 
கொஞ்சம் சுழற்றித்தான் விடேன், கூவியும் விடுகிறோம் 
ஆதிமூலா-வேன்று. அதுவரை பொறுத்து பார்ப்பதென்ன உன் 
இல்லா காலத்தின் களி ஆட்டமோ 
:::~~~~~~~~~~~~~~~~~:::

விலகாதிருக்கட்டுமே

::: விலகாதிருக்கட்டுமே :::
முடிவு கொடுக்கிறது கொஞ்சம் உற்சாகம் 
உடனே வந்திடும் ஒரு புது தொடக்கம் 
ஆகிலும்.. குழலாள், விழியாள், அவள் 
பாதம் கொண்ட என் முடி விலகாதிருக்கட்டுமே 
:::~~~~~~~~~~~~~~~~~:::

உலக குடிமகன்களே!

::: உலக குடிமகன்களே :::
மாடுகள், நாய்கள் இவைகளும் நம் சீர்
உலக குடிமகன்களே, நம் பிள்ளைகளிடம்
சொல்லி பேசுவது போல எப்பொழுதும்
பழககினோம் சுத்த ஆங்கிலம் மட்டும்
:::~~~~~~~~~~~~~~~~~:::

Friday, January 31, 2014

விழியாளில்

பேச்ச்சற்று போனேன் பராவில்லை
போனால் இன்னும் சிறு பொழுதில்
மூச்சற்றும் போவேநோ?, எழில்
தன் கண் கொண்ட விழியாளில்...