Sunday, June 3, 2012

கண்ணொளி மின்னல்!


மாயட்டும் பொய்யர்கள்
ஒளியை விட ஓசை சற்றே தாமதிக்குமாம்
மின்னிய பின்தான் இடி இடிக்குமாம்
இடி இடி என இடித்தது கொலுசோசை
உருக்குலைந்த என்னை பின்னரும் இரக்கமே இல்லாமல்
வெட்டியே சென்றது அந்த கண்ணொளி மின்னல்!

ஊடுருவல்...

'சுள்' என காயும் வெய்யிலில் 
'சில்' என குடித்த தண்ணீரை தவிர
என்னுள் எங்கு வரை ஊடுருவி பரவியது
என்பதை உணர்ந்தது உன் பார்வையில்....