Wednesday, July 8, 2015

காது மடல் மறைத்த சூடிய ஓர் மலர்ந்த செம்பருத்தி
தலை தோட்டிய பின் வாசம் பார்க்கும் காசி துண்டு
இவையோடுநொடி துளியில் நாங்கள் சாலை பறக்கையில்
அந்த சிறுமி கண்ணால் மட்டும் தெறித்த புன்னகை
மீண்டும் காண்பேன் என்னற்ற முறை என்னுள்
அன்று ஏற்பட்ட பயணத்தை பயணித்து

Tuesday, April 21, 2015

மாடியின் ஜன்னலில் இருந்தபடி

இந்த மாடி ஜன்னலில் இருந்து நான்காட்சியில்.. 

குழந்தை விளையாடி விட்டுவிட்டு போன கூடமாய்
சிதரி போட பட்ட சீரான கட்டிடங்களின் குவியல்

அதற்க்கு பின் ஒரே கோடாய் நீட்டி வைத்த தெளிவான நீல கடல்
அதன் மேல் மிக உயரத்தில் அழகாக மிதக்கும் ஒரு கப்பல்

அதற்கும் பிண்ணே தெளிந்த வானம்
அதில் விளையாட்டாய் மிதக்கும் ஒரு தொடர் குண்டு வெடிப்பு

இந்த பத்தாவது மாடியின் ஜன்னலில் இருந்தபடி நான்

Monday, March 9, 2015

பார்த்தவுடன் அப்படியே, உள்ளபடியே
புரத்தை விரும்பியவனானேன்
வாழ்வனைத்தும் உன் அகத்தையும்
அப்படியே, உள்ளபடியே விரும்ப
சந்தர்ப்பம் தருவாயா?

உன்னில் என்னை
முழுதாக மறுப்பில் வைத்து
வாழ்வனைத்தும் உன் அகத்தில், நான் மட்டும்,
முழுதான விருப்பை தொட்டு வரும்
சந்தர்பங்கள், முயல, தருவாயா?

Monday, November 10, 2014

கண்களாலா பெளர்ணமி ?

அவள் கண்களை இன்று
சில நொடிகள் நேராக காண கண்டேன்.

என்ன அதிசயம்

சதுர்தியில் இன்று பெளர்ணமி பொல
நிலவும் ஒளியும் இறுக்க கண்டேன்.

Friday, October 31, 2014

இன்று நான் காண்பது

மயங்கி உறங்கும் பயனத்தில் 
ஒரு கனம் எழுப்பி
இது பார் இங்கு என்ற முழு நிலவு,
இன்றும் உலுக்கி காண செய்த உன் கண்கள்

கன், எறிந்து அனைந்து எறியும்
கூசும் நெடுஞ்சாலை மொழிகளா
இல்லை, அவை குளிர்ந்த கனிவு தரும்
இன்றும் நான் காணும் விழி நிலவு

மயங்கி உறங்கி செல்லும் என் பயனத்தில்
இன்று நான் காண்பது ஒரு நிலவு

நான் காணும் நிலவு

மயங்கி உறங்கும் இரவு பயனத்தில்
ஒரு கனம் உலுக்கி
இது பார் இங்கு என்ற முழு நிலவு
இன்றும் உலுக்கி காண செய்த
உன் கண்கள்

நிலவு ஒருமையில் இருக்க
இன்று இங்கோ கான்பது கலங்க செய்கிறது
சந்திர சூரிய விழிகள் என்பதெல்லாம்
சிம்ம ஆயனுக்கோ, வேழம் கிழித்தவனுக்கோ ஆகும் வித்தை
பென் தெய்வங்களுக்கு அப்படியாய் அல்ல

அபிராமிக்கு பட்டனாய், அரிவு அற்று அரிவது
இப்பென் விழிகள் இரண்டு அல்ல
கனிவுடனும் குளிருடனும், அழகுடனும் அமுதெனவே
அளிப்பவள் காளியாயினும் கெளரியாயினும்

மயங்கி உறங்கி
நான் காண்பது ஒரு நிலவு

கண்ணே

வைகரை இமை
விடியல் கண்
தோற்றம் கண்

தேடல் கண், தேர்வு கண்
தொடுகை கண்

அகழ்ந்திட கண், ஆழம் கண்
அமிழ்திடல் கண்ணிலே

ஆசி கண், அறிவித்தல் கண்
அன்பும் கண்ணே

ஊக்கம் கண், ஊர்ந்திடல் கண்
ஊடலும் கண்களாலே

ஊழ் கண்
உள் அளவும் கண்ணிலே, இனியேனும்
உறக்கம் தந்திடு என் இமையே

Thursday, October 2, 2014

ஆழம் உறைவது தீயே

தென்றல் ஏந்தி செல்லும் தணல் பொறிகளா இவை
கோவில் தெய்வம் காட்டும் தீப சுடரா இவை
அன்பில் சோறும் பிறக்கும் அடுபங்கரை தழலா இவை
தேவருக்காய் வின் தொடும் வேள்வி ஜ்வாலையா இவை
காத்திருக்கும் காட்டை சுவைக்கும் சென் நாவா இவை

நீரில் பிறந்ததாம் தீ
உன் கண்களுள் நீர் இருப்பினும்
அதன் ஆழம் உறைவது தீயே

Friday, September 26, 2014

உன் பதம் மட்டும் எமக்கு அருள்வாய்

விதி வழி ஊர்ந்த வாழ்வில்
உன் விழி ஓடிய வழி வந்தேன்

விதவிதம் தினம் நிகழ் வாழ்வில்
உன் விரல் கூட்டிய விதம் நின்றேன்

வழி பல காணும் இவ்வுலகில்
உன் குரல் கூரிய திசை சென்றேன்

மலர் வாசம் நிறை சோலை, இவை

உன் குழல் சூடிய மனம் என்றேன்

வேண்டும் எம் சிரம் அமர்ந்திடல்
உன் பதம் மட்டும் எமக்கு அருள்வாய்

இரவு

இரவு
இவன் இங்கு இரைந்ததனால் அல்ல
இறைவி இசைந்து அருளியதால்